பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை - ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஜாமின் மனு தள்ளுபடி
கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி தாக்கல் செய்து இருந்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுள்ளது.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த நிலையில் அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார்.
இந்நிலையில் கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தற்கொலைக்கு தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி காரணம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தியது.
இதனிடையே வழக்கு தொடர்பாக கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மிதுன் சக்ரவர்த்தி பெருந்துறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார் இந்த நிலையில் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி தாக்கல் செய்து இருந்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.