பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை- ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

sexual abuse teacher coimbatore mithun chakravarthy student hanged posco case kundaas
By Thahir Dec 14, 2021 07:11 AM GMT
Report

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த நிலையில் அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார்.

இந்நிலையில் கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலைக்கு தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி காரணம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தியது.

இதனிடையே வழக்கு தொடர்பாக கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மிதுன் சக்ரவர்த்தி பெருந்துறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில், மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்