பிரபல நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி உயிரிழந்தார் - திரைத்துறையினர் இரங்கல்

Death
By Nandhini Aug 04, 2022 12:11 PM GMT
Report

பிரபல பழம்பெரும் பாலிவுட் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி உயிரிழந்தார்.

மிதிலேஷ் சதுர்வேதி

ஹிருத்திக் ரோஷனுடன் ‘கோய் மில் கயா’, சன்னி தியோலுடன் ‘காதர் ஏக் பிரேம் கதா’, சத்யா, பன்டி அவுர் பப்லி, க்ரிஷ், உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சதுர்வேதி பல விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இணைய நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். சதுர்வேதி இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.

அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்த ‘குலாபோ சிதாபோ’ படம் தான் இவருடைய கடைசி படமாகும்.

Mithilesh Chaturvedi

சினிமாத்துறையினர் இரங்கல்

இதனையடுத்து, சதுர்வேதி லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இவருடைய இறப்பிற்கு பாலிவுட் நடிகர், நடிகைகள், இவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.