நடிகர்கள், விளையாட்டு வீரர்களை குறிவைக்கும் பாஜக .,.ஜே.பி. நட்டாவை சந்தித்த மிதாலி ராஜ்
ஹைதராபாத் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் நேற்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
தென் மாநிலத்தில் பாஜக தனது வாக்கு வாங்கியினை அதிகரிக்க நடிகர்கள், விளையாட்டு வீரர்களை குறிவைப்பதாகவும் பேசப்படுகிறது.
மிதாலிராஜ்
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வாரங்கல் பொதுக்கூட்டத் தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் தனது துணைவியாருடன் ஹைதராபாத் விமான நிலையம் வந்தார்.

அவரை மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜே.பி.நட்டா சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சந்தித்தார்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு
இருவரும் சுமார் 20 நிமிடங்கள் வரை பேசினர். இதுகுறித்து மிதாலி ராஜிடம் செய்தியாளர்களிடம் பேசிய போது இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மட்டும் கூறினார்.
பிரபலங்களை குறிவைக்கும் பாஜக
ஆனால், விரைவில் மித்தாலி பாஜகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது , கடந்த வாரம், ஹைதராபாத் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசினார்.

தெலங்கானாவில் நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜகமுயன்று வருவதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்,
சரிகமப : இறுதி சுற்று போட்டியாளராக தேர்வான ஷிவானியின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள் Manithan
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil