தொடர்ச்சியாக 5வது அரைசதம்: பெண்கள் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட மிதாலி ராஜ்

Mithali Raj Australia Women vs India
By Irumporai Sep 21, 2021 12:32 PM GMT
Report

மகளிர் கிரிக்கெட்டில் 20,000 ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ். இந்திய அணிக்காக 11 டெஸ்ட், 218 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் மிதாலி ராஜ் விளையாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.

கேப்டன் மிதாலி ராஜ் 63 ரன்கள் எடுத்தார். தொடர்ச்சியாக 5 அரை சதங்களை எடுத்துள்ளார். இது அவருடைய 59-வது அரை சதம். இதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸி. அணி, சிறப்பாக விளையாடி 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றது.

இந்த ஆட்டத்தின் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் 20,000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார் மிதாலி ராஜ். மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர் என்கிற பெருமையைக் கொண்டுள்ள மிதாலி ராஜ், தற்போது 20,000 ரன்கள் என்கிற இலக்கையும் அடைந்துள்ளார்.