மின்னல் வேகத்தில் வந்த பந்து -அரண்டு போன கிரிக்கெட் வீரர்: வைரல் வீடியோ
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இலங்கை அணி பேட் செய்த போது அவர் வீசிய 10 ஓவரில் 2வது பந்தில் குசல் பெரேரா சிக்ஸருக்கு விளாசினார். இதனால் அடுத்த பந்தில் சுதாரித்துக்கொண்ட மிட்செல் ஸ்டார்க் மிகவும் அற்புதமான யார்க்கர் ஒன்றை வீசினார்.
முந்தைய பந்தை விட சற்று வேகத்தை அதிகரித்த அவர், குசல் பெரேரா எதிர்பார்க்காத வகையில் கால்களுக்கு இடையே மிடில் ஸ்டம்பை கழட்டினார். அந்த பந்தை எப்படி தடுப்பது என்று குசல் பெரேரா யோசித்து முடிப்பதற்குள் விக்கெட் பறிபோனது. இந்த பந்துதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.