டெல்லி அணியில் இந்த வீரருக்கு தான் கொரோனா - அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் கொரோனா பரவ தொடங்கியுள்ள நிலையில் டெல்லி அணி நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ-பபுள் வளையத்தில் இருந்து வருகின்றனர்.
OFFICIAL STATEMENT:
— Delhi Capitals (@DelhiCapitals) April 18, 2022
Delhi Capitals all-rounder Mitchell Marsh has tested positive for COVID-19, following which he has been admitted to a hospital. The Delhi Capitals medical team is closely monitoring Marsh’s condition. pic.twitter.com/lvatopJtcV
இதனிடையே கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மூத்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்க்கு கொரோனா உறுதியானது. இதற்கு மறுநாள் அணியில் வீரர்களுக்கு மசாஜ் அளிக்கும் தெரபிஸ்டுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 16 ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி பங்கேற்றது. அதன்பின் நாளை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்காக புனே செல்லவிருந்தது. ஆனால் வழக்கமாக அணியைச் சேர்ந்தவர்களுக்கு எடுக்கப்படும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ்க்கு முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தநிலையில் இரண்டாவது சோதனையில் பாசிட்டிவ் என வந்தது. இதனால் டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு ஐபிஎல் நிர்வாகம் வழிகாட்டுதல்களின்படி ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதேசமயம் அந்த அணியின் சமூக வலைத்தளக் குழுவைச் சேர்ந்த ஒருவர், டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டலைச் சேர்ந்த 3 ஊழியர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மிட்சல் மார்ஷ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இன்று வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் புதன்கிழமை திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.