பல நாள் காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய வீரர்; முத்தமிட்டு உறுதி - ஃபோட்டோஸ் வைரல்
மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
மிட்செல் மார்ஷ்
டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 3 ஐபிஎல் போட்டியில் விளையாடி மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் வீரர், 3-வது போட்டியில் விளையாடவில்லை.
அவருக்குப் பதிலாக ரோவ்மன் பவல் அணியில் இடம் பெற்றார். 2021ல் மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம்
இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து என் வாழ்வின் சிறந்த நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். கிரேட்டா மேக் ஒரு துணை இயக்குநர். கிரேட்டா மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச எக்சேஞ்ச் புரோகிராம் படித்து பணியாற்றியுள்ளார்.