ரூ.20,000 கோடி கடனில் தவிக்கும் மிஸ்திரி குடும்பம்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் மிஸ்திரி குடும்பம் கடனின் தவித்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா குடும்பத்தைத் தவிர்த்து அதிகமாகப் பங்குகளை ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் தான் வைத்துள்ளது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு டாடா சன்ஸ் தலைவராகச் சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டார்.
ஆனால் இவரின் பல முடிவுகள் ரத்தன் டாடா உட்படப் பலருக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் கடுமையான பிரச்சனைக்கு மத்தியில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே சைரஸ் மிஸ்திரியின் குடும்ப நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி அதிகளவிலான கடனில் மூழ்கியிருக்கும் காரணத்தால் டாடா சன்ஸ் பங்குகளை வைத்து நிதி திரட்ட போராடி வருகிறது.
சைரஸ் வெளியேற்றத்திற்குப் பின்பு டாடா குழுமம் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், டாடா சன்ஸ் மற்றும் ஷபூர்ஜி பல்லோன்ஜி மத்தியிலான உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் ஷபூர்ஜி பல்லோன்ஜி அதிகளவிலான கடனில் மூழ்கியது. 150 வருடமாக இயங்கி வரும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் மொத்தமாக 20,000 கோடி ரூபாய் அளவிலான கடனை வைத்துள்ளது.
இந்தக் கடனுக்கான தவணையைச் சரிவரச் செலுத்தி வந்தாலும், கடனை தீர்க்க ஒவ்வொரு சொத்து மற்றும் வர்த்தகத்தை விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.