இந்திய அணி செய்த முக்கிய' தவறுகள் பாகிஸ்தானுடன் தோற்க காரணம் என்ன ?

t20worldcup2021 INDvPAK
By Irumporai Oct 24, 2021 10:03 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை தொடரில் துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியை தோற்கடித்து சாதித்துள்ளது.  இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தது இவைதான் .

பாகிஸ்தானுக்கு எதிரான   போட்டியின் போது  தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேறியது. ரோஹித் சர்மா டக் மற்றும் ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்

சூர்யக்குமார் யாதவ் 11 ரன்னில் ஆட்டமிழக்க  பவர் பிளேவில் இந்திய அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இதனால் பெரிய இலக்கை அடைய  முடியாமல் இந்திய அணி திணறியது.

குறிப்பாக இந்திய அணியில் இருந்த பந்து வீச்சாளர்கள் 3 பேர் இருந்த போதும் அவர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. பவர் ப்ளேவின் போது  பாகிஸ்தான் விக்கெட் இல்லாமல் 43 ரன்கள் எடுத்தது. பாபர் ஆஷம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடியை அவுட்டாக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணிறினார்கள்.

அதே போல் பாஇஸ்தான் அணிக்கு  கடைசி 8 ஓவர்களில் 67 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அப்போது  இந்திய பவுலர்கள் யாரும் பாகிஸ்தான் அணியினருக்கு   அழுத்தம் கொடுக்கவில்லை.

இவற்றை எல்லாம் விட தோவிக்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் கூறுவது இது தான் :

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அனுபவம் வாய்ந்த ரவிசந்திரன் அஸ்வின் போன்ற வீரர் தேர்வு செய்யப்படவில்லை.

ஹர்திக் பாண்டியாவின் உடல் நிலை கடந்த சில காலமாகவே சிறப்பாக இல்லை ஆகவே அவர் பந்துவீசவில்லை.

ஒரு சிறந்த ஹிட்டர் வேண்டுமென்றால் இஷான் கிஷானை தேர்வு செய்திருக்கலாம். ஐபிஎல் தொடரில் ஹர்டிக் பாண்டியாவை விட இஷான் கிஷான் மிக சிறப்பாக விளையாடியது  குறிப்பிடதக்கது