இந்த தப்ப மட்டும் செய்யாதிங்க : இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த வி.வி.எஸ் லக்‌ஷ்மண்

advice vvslaxman indianbatters
By Irumporai Dec 10, 2021 06:33 AM GMT
Report

இந்தியா மற்றும் சவுத் ஆப்ரிக்கா இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்

 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

குறிப்பாக சவுத்ஆப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா,இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளை தவிர வேற எந்த அணியும் தோற்கடிக்க வில்லை என்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிகப் பெரும் சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த தப்ப மட்டும் செய்யாதிங்க  : இந்திய அணிக்கு  அட்வைஸ் கொடுத்த வி.வி.எஸ் லக்‌ஷ்மண் | Mistakes Are Repeated Vvs Laxman India Batters

இருந்தபோதும் கடந்த கால மோசமான வரலாறுகளை மாற்றி இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருப்பதை போன்று, முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவி எஸ் லக்ஷ்மன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், இந்திய அணி முன்பு செய்த தவறை இந்த தொடரில் மீண்டும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா மற்றும் ரஹானே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

மேலும் சுப்மன் கில் மிக சிறந்த முறையில் ஆட்டத்தை துவங்கினாலும் அதை பெரிய ஸ்கோராக மாற்ற தவறிவிட்டார், கடந்த தொடர்களில் இந்திய அணியில் டாப் பாட பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக விளையாடி வருகிறார்கள். இதை இந்திய அணி உணர்ந்து அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்திய அணியின் லோயர் ஆர்டர் மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் மிக கவனத்துடன் விளையாடி அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்திருந்தார்.

  சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.