என்னை காணவில்லையே நேற்றோடு.. காட்டில் காணமால் போனவர் செய்த வியக்க வைக்கும் செயல்
Missing
Person
Intresting
By Thahir
துருக்கியில் 50 வயது நபர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக காட்டிற்குள் சென்றுள்ளார்.
நண்பர்கள் அனைவரும் மது அருந்து கொண்டாட்டமாக இருந்தபோது 50 வயது நபரை மட்டும் காணவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கு வந்த போலீஸார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சம்பந்தபட்ட நபரை தேடிக் கொண்டிருக்க அவர்களோடு சேர்ந்து காணாமல் போனவரும் யாரையோ தேடிக் கொண்டிருந்திருக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவரே "யாரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?" என போலீஸாரிடம் கேட்க அப்போதுதான் இந்த நபர் தங்களோடு சேர்ந்து தேடிக் கொண்டிருப்பதை கவனித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.