60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து அமெரிக்க அழகி தற்கொலை - பொதுமக்கள் அதிர்ச்சி

missusa chesliekryst
By Petchi Avudaiappan Jan 31, 2022 06:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அமெரிக்கா
Report

’மிஸ் அமெரிக்கா’ பட்டம் வென்ற அழகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப்போட்டியில் பட்டம் வென்ற  ஜாஸ்லி ரிஸ்ட் என்பவர் தொடர்ந்து மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார்.

இவர் ஜாஸ்லி ரிஸ்ட் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் நகரில் 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 9வது மாடியில் உள்ள பிளாட்டில் வசித்து வந்தார். இதனிடையே அவர் தான் வசித்துவந்த 60 மாடி கட்டிடத்தில் இருந்து கிழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். 

ஜாஸ்லி கடைசியாக கட்டிடத்தின் 29வது மாடியில் நின்றுகொண்டிருந்தபோது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள  நிலையில் அவர் அங்கிருந்து தான் குதித்திருப்பார் என கூறப்படுகிறது. 

மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜாஸ்லி ரிஸ்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும் என தெரிவித்துள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.