மிஸ் யுனிவர்ஸ்; உள்ளாடையை கழற்ற கூறி உடல் சோதனை - அலறிய போட்டியாளர்கள்!
மேலாடையின்றி உடல் சோதனை நடத்தப்பட்டதால் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மிஸ் யுனிவர்ஸ்
மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடாரில் நடைபெறும் வருடாந்திர மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான, இந்தோனேசி நாட்டின் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி, இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் கடந்த ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. அதில், பங்கேற்க இருந்த 6 போட்டியாளர்கள், தாங்கள் மேலாடையின்றி உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறியும்,
உடல் சோதனை
நிகழ்ச்சி அமைப்பாளர்களால் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தோனேசிய அழகிப்போட்டியின் 5 போட்டியாளர்கள், தாங்கள் ஆண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் இருந்த ஒரு அறையில், உடல் பரிசோதனைக்காக உள்ளாடைகளைக் கழற்றுமாறு அமைப்பாளர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஐந்து போட்டியாளர்களும் மேலாடையின்றி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வழக்கறிஞர் மெல்லிசா ஆங்க்ரேனி தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, போட்டி நடத்தும் நிறுவனமான பி.டி கபெல்லா ஸ்வஸ்திகா கார்யா மற்றும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் பாப்பி கேபெல்லா ஆகியோரை ஊடகங்கள், அவர்களின் சமூக ஊடக கணக்குகள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் அவர்களிடமிருந்து பதில் எதுவும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.