9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உதயநிதியின் ‘சைக்கோ’திரைப்படம்
மிஷ்கின் - உதயநிதியின் கூட்டணியில் உருவான ‘சைக்கோ’ திரைப்படம் சைமா திரைப்பட விழாவில் 9 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னணி இயக்குனராக மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான திரைப்படம் ‘சைக்கோ’. சூப்பர் ஹிட்டடித்த இப்படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி ஆகிய இரு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
இசைஞானி இசையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது. டபுள் மீனீங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை பிடிக்க க்ளூ கிடைக்காமல் தேடி அலையும் போலீஸ், இறுதியில் குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் முழு கதை.
உதயநிதியும் இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மிஷ்கின் இப்படத்தை காட்சிப்படுத்திய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இப்படம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான சைமாவுக்கு 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இயக்கம், நடிப்பு, இசை, சிறந்த பாடல், பின்னணி பாடகர், அறிமுக தயாரிப்பாளர், ஒளிப்பதிவு, வில்லன் உள்ளிட்ட 9 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் நடக்கும் விழாவில் கண்டிப்பாக இப்படம் விருதுகளை குவிக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.