முதல்வர் பற்றி தவறான கருத்து: ஆ.ராஜாவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
முதல்வரின் தாயாரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வரின் தாய் குறித்து, தி.மு.க.,வின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பலரும் ஆ.ராசாவின் கருத்தை கண்டித்திருந்தனர்.

இதுகுறித்து பின்னர் வருத்தம் தெரிவித்த ராஜா தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ராஜாவின் கருத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் பதினாறாம் கால் மண்டபம் முன்பு அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் வீடு சுத்தம் செய்யும் துடைப்பங்கள் கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.