தெலுங்கு படத்துல அந்த காட்சி, எடுக்கும் போது...அப்படி feel ஆச்சு!! மிருணாளினி ரவி
இளம் நடிகைகளில் பிஸியான ஒரு நடிகையாகவே வளம் வருகிறார் மிருணாளினி ரவி.
மிருணாளினி ரவி
டாப்ஸ்மேஷ் செய்வதும் மூலம் பிரபலமாகி, பிறகு படங்களில் நடிக்க துவங்கியவர் மிருணாளினி ரவி. தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் "ஏலியன்" கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகினர்.

அதனை தொடர்ந்து, தெலுங்கில் கடலக்கொண்ட கணேஷ், விஷால் ஆர்யா நடிப்பில் வெளியான "எனிமி", விக்ரமின் கோப்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
அந்த காட்சி..
தனது நடிப்பு அனுபவங்களை குறித்து அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அந்த பேட்டியில். பேசும் போது, தனக்கு ரொமான்ஸ் காட்சிகள் என்றாலே, நடுக்கம் வந்துவிடுவதாக கூறி, தெலுங்கு படத்தில் கிஸ் சீன் எடுக்கும் போது, இயக்குனர் கூட அதற்காக தன்னை திட்டியதாக மிருணாளினி தெரிவித்துள்ளார். 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    