15 மாத அதிசய கர்ப்பம் - பெண்களை இழுக்கும் புதிய வகை மோசடி
குழந்தை இல்லாத பெண்களை குறி வைத்து புது வகையான மோசடி அரங்கேற்றப்படுகிறது.
குழந்தை இல்லாமை
திருமணம் ஆகி விட்டாலே எப்போது குழந்தை பிறக்கும் என கேள்வி கேட்டு பெற்றோரும் உறவினர்களும் அந்த பெண்ணை குற்றஉணர்ச்சிக்கு தள்ளி விடுவார்கள்.
இந்நிலையில் இப்படி குழந்தை இல்லாத பெண்களை குறி வைத்து புது வகையான மோசடியை அரங்கேற்ற தொடங்கி விட்டார்கள்.
அதிசய கர்ப்பம்
உலகில் அதிக குழந்தை பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. அங்கு ஒரு பெண் 5 குழந்தைகளை பெற்றுக்கொள்வது சகஜமான ஒன்று. அத்தகைய சூழலில் குழந்தை இல்லாத பெண்கள் மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். அந்த பெண்களை யாரும் எந்த விசேஷங்களுக்கும் அழைக்காமல் ஒதுக்கி வைக்கிறார்கள்.
எப்படியாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தவிக்கும் அந்த அந்த பெண்களை குறி வைத்து அதிசய கர்ப்பம் என்ற மோசடி நடைபெற்று வருகிறது. இதற்காக சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் கருத்தரிப்பு கிளினிக்குகளில் உள்ள போலிமருத்துவர்கள் , தன்னிடம் அதிசய சிகிச்சை இருப்பதாகவும், இதற்கு பல மர்ம ஊசி மற்றும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இதில் குழந்தையின் பாலினத்தை தேர்ந்தேடுத்துக்க கொள்ளலாம் என்றும், இதற்கு அதிக செலவாகும் எனவும் தெரிவிக்கின்றனர். இதற்கு சம்மதிக்கும் பெண்களுக்கு சில ஊசிகளை போட்டு சில நாட்களிலேயே அவர்களின் வயிற்றை பெரிதாக்குகிறார்களாம். அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்ற போது, அவ்வளவு தான் நீங்கள் கர்ப்பமடைந்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளனர்.
15 மாத கர்ப்பம்
வேறு மருத்துவர்களிடம் செல்ல கூடாது, இது கர்ப்ப பைக்கு வெளியே வளரும் குழந்தை இதனால் சோனோகிராம் சிகிச்சையில் அது தெரியாது என்பதால் சோனோகிராம் கர்ப்பத்தை செக் செய்ய சோனோகிராம் டெஸ்ட் எடுக்கக்கூடாது என எச்சரிக்கிறார்கள்.
அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் டெலிவெரிக்கு வர சொல்கிறார்கள். அப்போது பிரசவத்திற்கு பல லட்சம் செலவாகும் என கூறுகின்றனர். சம்மதிக்கும் பெண்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து மயக்கமடைய செய்ய ஊசி போடுவார்கள். மயக்கத்தில் இருக்கும் போதே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தது போல் கீறுவார்களாம். குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி சில நாட்கள் கழித்தே பெற்றோரிடம் குழந்தைகளை காட்டுவார்களாம்.
மறுபுறம், இளம்பெண்களை கடத்தி விருப்பத்திற்கு மாறாக கர்ப்பமாக்கி குழந்தை பெற வைக்கிறார்கள். அந்த குழந்தைகளை பிடிங்கி சிகிச்சைக்கு வந்த தம்பதிகளிடம் அளிக்கிறார்கள். இந்த மோசடியில் 100 க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் ஏமாந்த பெண்கள் உண்மையாக குழந்தை பெற்றதாகவும் 15 மாதங்களாக கர்ப்பமாக இருந்ததாகவும் நம்புகின்றனர்.