மீராபாயின் பயிற்சியாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்...!

 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானுவின் பயிற்சியாளருக்கு பரிசுத்தொகை அளிக்கப்பட உள்ளது.

பளு தூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற மீராபாய் ஒட்டுமொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் மீரா பாய்க்கு பயிற்சி அளித்த விஜய் சர்மாவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகள் யாரேனும் தங்கம் வென்றால் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரூ.12.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருந்தது.

வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.10 லட்சமும், வெங்கல பதக்கம் வென்றால் ரூ. 7.5 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாய்-ன் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்