தங்கம் வென்ற மீராபாய் சானு - ஜனாதிபதி, பிரதமர் புகழாரம்
Narendra Modi
Draupadi Murmu
By Irumporai
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.
இந்தியாவுக்கு தங்கம்
பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது பதக்கமாகும்.

ஜனாதிபதி வாழ்த்து
இந்நிலையில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல், விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.