மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானவள்: மீராபாய் போட்ட ட்விட்டால் நெகிழ்ந்த ரசிகர்கள்

Tokyo Olympics mira bai chanu Weightlifting
By Petchi Avudaiappan Jul 24, 2021 04:41 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

 ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து இந்திய வீராங்கனை மீராபாய் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பளு தூக்குதல் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் "எனது நீண்ட நாள் கனவு இன்று நிஜமானதாக கருதுகிறேன். இந்த பதக்கத்தை இந்தியாவுக்காக சமர்பிக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்றி கூறவும் நான் கடமைப்பட்டுள்ளேன்" என கூறியுள்ளார். மேலும் நான் மணிப்பூரை சேர்ந்தவள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சொந்தமானவள். எனவே நாட்டிற்காக பதக்கம் வென்றதில் பெருமைப்படுகிறேன்.

இந்த தருணத்தில் என் குடும்பத்தினருக்கும்,என்னை நம்பி பல தியாகங்களை செய்த எனது தாய்க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பயிற்சியாளர், மத்திய அரசு, விளையாட்டு துறை அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் கமிட்டி, பளுதூக்கு கமிட்டி, இந்திய ரயில்வே துறை, ஸ்பான்ஸர்கள், உதவி செய்தவர்கள் என அனைவருக்கும் மீராபாய் சானு நன்றி தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.