விவாகரத்து, தொடர் தோல்வி என விஜய் பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை
விஜய்யுடன் ஹீரோயினாக நடித்த மோனிகா விவாகரத்து, தொடர் தோல்வி என துவண்டு போன நிலையில் தற்போது இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் மோனிகா காஸ்டலினோ. இப்படத்தில் இடம் பெற்ற ‘உன் பேர் சொல்ல ஆசையா’ என்ற பாடலை சொன்னால் இன்றளவும் இவரை சட்டென நினைவுக்கு கொண்டு வருபவர்கள் பலர்.
மும்பையை சேர்ந்த மோனிகா காம சுந்தரி என்கிற படத்தில் கவர்ச்சியாகவும் நடித்தார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்தபோதிலும் அவர் தொடர் தோல்விகளை சந்தித்ததால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
இதனால் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதனிடையே சத்யபிரகாஷ் சிங் என்கிற துணை இயக்குநரை திருமணம் செய்த நிலையில் திருமணமான ஓராண்டுக்குள் சத்யபிரகாஷ் சிங்கிற்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் தம்பதியினர் பிரிந்தனர்.
இந்நிலையில் அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவது அறிந்து விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil