காதலுக்கு எதிர்ப்பு - காதலனோடு தாயை கத்தரிக்கோலால் குத்தி கொலைசெய்த சிறுமி
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, காதலனோடு சேர்ந்து சிறுமி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் மோகம்
மும்பை, பாத்திமா ஹைட்ஸ் என்ற கட்டடத்தில் வசித்தவர் ஷபா ஹஸ்மி. இவருக்கு மூன்று மகள்கள். அவரின் கணவர் போதைப்பொருள் வழக்கில் இரண்டு ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். டியூஷன் நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தில் ஷபா தனது குடும்பத்தை நடத்திவந்தார்.

மூத்த மகளான 17 வயது சிறுமி, புர்ஹான் ஷேக் (22) என்ற வாலிபரைக் காதலித்துவந்தார். இதற்கு அவரது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். புர்ஹான் ஷேக் அடிக்கடி சிறுமியின் வீட்டில் தங்குவது வழக்கம். இதற்கும் ஷபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தாய் கொலை
அதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் சிறுமி, தன்னுடைய காதலனோடு சேர்ந்து கத்தி, கத்திரிக்கோல் ஆகியவற்றால் ஷபாவின் நெஞ்சு, கழுத்துப் பகுதிகளில் சரமாரியாகக் குத்திவிட்டு வீட்டின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சிறுமி மற்றும் காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.