காதலித்தவனை கரம் பிடிக்க 17 வயது சிறுமி செய்த கார்யம் ; அதிர்ச்சியில் உரைந்த ஊர்மக்கள்!
காதலித்தவனை திருமணம் செய்வதற்காக மூதாட்டியை கொலை செய்து 20 பவுன் நகையை கொள்ளையடித்த 17 வயது பள்ளி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் வீதியை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 72). இவருக்கு செந்தில்வேல் என்ற மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது இவர் மகன் செந்தில்வேல் மற்றும் பேரனுடன் மாரியப்பன் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை செந்தில்வேல் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார்.மூதாட்டி நீண்டநேரம் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் செந்தில்வேலுக்கு தகவல் கொடுத்தனர். வீட்டுக்கு வந்து செந்தில்வேல் பார்த்த போது தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு காதில் இருந்த கம்மல் மற்றும் கழுத்தில் இருந்த 15 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களை விசாரித்ததில் அதில் ஒரு 17 வயது பள்ளி சிறுமியின் நடமாட்டமும் பதிவாகி இருந்ததால் அந்த சிறுமியை காவல்துறையினர் விசாரித்தனர்.
விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார் அந்த சிறுமி, அதை கண்டு காவல்துறையினர் சிறுமியிடம் மேலும் விசாரணை செய்ததில் காதலித்தவனை திருமணம் செய்வதற்காக பணம் தேவைப்படுவதால் நகைக்காக ஆசைப்பட்டு கொலை செய்யப்பட்டதை சிறுமி ஒப்புக்கொண்டார்.
பின்னர் மேற்கு காவல் நிலைய போலீசார் பள்ளி சிறுமியை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நகைக்காக ஆசைப்பட்டு மூதாட்டியை பட்டப்பகலில் கழுத்தை நெரித்து சிறுமி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.