பாலியல் வன்கொடுமை ஊக்குவிப்பு - பெர்ஃப்யூம் விளம்பரத்துக்கு செக்!

Tamil nadu Sexual harassment
By Sumathi Jun 05, 2022 07:40 AM GMT
Report

பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை யூ டியூப் மற்றும் ட்விட்டரில் நீக்கும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாசனை திரவியம்

Layers Shots வாசனை திரவிய விளம்பரங்கள் அன்மையில் யூ டியூப் போன்ற ஊடகங்களில் வெளியானது. இந்த விளம்பரங்களில் பெண்கள் குறித்து மிகவும் இழிவாக சித்தரித்துள்ளதாகவும் பாலியல் வன்முறையை தூண்டும் விதமாக விளம்பரங்கள் உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

பாலியல் வன்கொடுமை ஊக்குவிப்பு - பெர்ஃப்யூம் விளம்பரத்துக்கு செக்! | Ministry Order To Remove Advertisement For Rape

இந்த விளம்பரத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி மகளீர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ஷாட் நிறுவனத்தின் விளம்பரம் அச்சமுட்டூம் வகையில் உள்ளது. நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையை மிக மோசமான வடிவில் காட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை கலாச்சாரத்தை தெளிவாக வளர்க்கிறார்கள்.

மத்திய அரசு அதிரடி

நிறுவன உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, எஃப்ஐஆர் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி I&B அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெர்வித்திருந்தார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய விளம்பரத்தை யூ டியூப் மற்றும் ட்விட்டரில் நீக்கும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

பின்னர், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் நடவடிக்கையை தொடர்ந்து அவற்றை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது