பெட்ரோல் விலையைக் குறைக்கும் முயற்சியில் நிதி அமைச்சகம்

price petrol diesel
By Jon Mar 04, 2021 12:34 PM GMT
Report

பெட்ரோல் விலையைக் குறைக்கும் வகையில் நிதி அமைச்சகம் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. கிடுகிடுவென உயரும் பெட்ரோல் -டீசல் விலைக்கு கடிவாளம் போட நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை இரண்டு மடங்கு ஆனதாலும், மத்திய-மாநில அரசுகள் பல்வகை வரிகளை சுமத்துவதாலும்,பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் விலை உயர்வை குறைக்கும் திட்டத்துடன், பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைப்பது பற்றி நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக சில மாநில அரசுகள், பெட்ரோலியம் அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுடன் நிதி அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.