ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள் காரணம் என்ன?
அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆட்டோவில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏன் இவர்கள் திடீரென்று ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் காரணம் இதுதான்.'
மறைந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் நினைவு தினம் இன்று. அவருக்கு மரியாதை செலுத்த செலுத்த மூவரும் சென்ற போது, அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது.

இதனால் கார்களில் இருந்துஅமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர்இறங்கி, ஆட்டோ பிடித்து சென்று மறைந்த திமுக எம்எல்ஏவின் முதலாமாண்டு நினைவு நாளில், கலந்து கொண்டு ஜெ. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் ஆட்டோவில் சென்றதற்கு இதுதான் காரணமாக கூறப்படுகிறது அதோடு அவர்கள் ஆட்டோவில் பயணம் சென்ற புகைப்படமும் வைரலாகிறது.