வெளிநாட்டு பயணத்தால் சிக்கலில் தவெக அமைச்சர்கள் - மத்திய அரசு நோட்டீஸ்

Passport Thamizhaga Vetri Kazhagam Rajmohan
By Karthikraja Jul 15, 2026 01:57 PM GMT
Report

அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகன் வெளிநாடு சென்றது குறித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கலில் தவெக அமைச்சர்கள்

தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் அரசு பயணமாக வெளிநாடு சென்று திரும்பினர். 

வெளிநாட்டு பயணத்தால் சிக்கலில் தவெக அமைச்சர்கள் - மத்திய அரசு நோட்டீஸ் | Ministers Raj Mohan Keerthana Foreign Trip Issue

அமைச்சர் கீர்த்தனா தொழில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு சென்றதாக தகவல் வெளியானது. 

தற்போது இந்த விவகாரம் தமிழ்நாடு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அரசுமுறை பயணமாக செல்லும் போது, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியை பெற்று, Diplomatic Passport மூலமாகவே பயணிக்க வேண்டும் என்பது விதியாகும். 

வெளிநாட்டு பயணத்தால் சிக்கலில் தவெக அமைச்சர்கள் - மத்திய அரசு நோட்டீஸ் | Ministers Raj Mohan Keerthana Foreign Trip Issue

சமீபத்தில் அமைச்சர்கள் Diplomatic Passport ல் செல்லாமல் தங்களது சொந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

உரிய அனுமதி பெறாமல் சென்றது குறித்தும், சொந்த பாஸ்போர்ட்டில் சென்றது குறித்தும் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.