திமுகவிற்கு அடுத்த சிக்கல் - தினசரி விசாரணை - உயர்நீதிமன்றம் அதிரடி..!
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் தங்கம் தென்னரசு மீதான விசாரணைகள் தினசரி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பேரிடர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீது மறு ஆய்வு வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இதில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அமைச்சர்கள் மீதான அனைத்து வழக்குகளிலும் பிப்ரவரி 5-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் விசாரணை துவங்கும் என தெரிவித்துள்ளனர்.
சங்கடத்தில் திமுக
அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் 3 மணிக்கு விசாரணை தொடங்கும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கமளித்துள்ளார்.
ஏற்கனவே திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை எதிர்கொண்டு வருவது அமைச்சர் பதவியை பொன்முடி இழந்தது போன்றவை திமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், தற்போது அடுத்த அமைச்சர்கள் மீது வழக்குகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுகவிற்கு இது சங்கடத்தை உருவாகியுள்ளது.