அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம் : அண்ணாமலை ஆடியோ வெளியாகி பரபரப்பு

DMK BJP K. Annamalai Palanivel Thiagarajan
By Irumporai Aug 26, 2022 03:31 AM GMT
Report

மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினர் கோஷமிட்டனர்.

அமைச்சர் கார்மீது செருப்பு வீச்சு

அமைச்சர் இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க அவரது காரின் மீது செருப்பு வீசியும், கார் கண்ணாடிகளை அடித்தும் தாக்குதலை நடத்தினர்.

அமைச்சர் கார் மீது செருப்பு  வீசப்பட்ட விவகாரம் :  அண்ணாமலை ஆடியோ வெளியாகி பரபரப்பு | Ministers Car Audio Annamalai Speaking Sensational

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் கார் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சேர்ப்பு வீசிய பாஜக மகளிரணி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

வெளியான ஆடியோ

இந்த நிலையில், இந்த விவாகரத்தில் பாஜக வேண்டும் என்றே அரசியல் செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை பாஜக நிர்வாகி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் பேசிய அண்ணாமலை சம்பவம் நடக்கும் இடத்துக்கு 1000 பேரை அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மாஸாக செய்யவேண்டும் என்று கூறுவது போல் ஆடியோ உள்ளது

இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதி அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சமபவத்திற்கு பிறகு  மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன், நிதிஅமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து,=கட்சியில் இருந்து பாஜக நீக்கியது குறிப்பிடத்தக்கது.