நிதிநிலை மோசம்: தூய்மை பணியாளர்கள் முன் பேசிய அமைச்சர் ஆனந்த்
பணி நிரந்தரம், சம்பள உயர்வு, மகப்பேறு விடுப்பு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் 16வது நாளாக தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் தூய்மைப்பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய அமைச்சர் என்.ஆனந்த், உங்களது கோரிக்கையை கேட்குமாறு முதலமைச்சர் எங்களை அனுப்பி வைத்தார்.
அவர் நிச்சயம் உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார், உங்கள் கோரிக்கை நியாயமானது, ஆனால் நிதிநிலை மோசமாக இருக்கிறது, நிதி நிலையை பொறுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற பின்னர் எதையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதை செய்து வருகிறார்.
கடன் வாங்கி மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார், உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சருக்கு அவகாசம் கொடுங்கள் என தெரிவித்தார்.
அறவழியில் போராடிய உங்களுக்கு தலைவணங்குவதாகவும், உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதே எங்களது கடமை எனவும் அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.