கருப்பு பூஞ்சை பாதிப்பு.. மருத்துவ வல்லுநர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை ஆலோசனை...
தமிழகத்தில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், மறுபுறம் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது வரை 256 நபர்கள் தமிழகம் முழுவதும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு மற்றும் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் மா. நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர் என கூறப்படுகிறது.