ஆய்வின் போது யோகா செய்து அசத்திய அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!
சித்த மருத்துவமனையின் கட்டளை மையத்தை திறந்து வைத்த பின்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீரென யோகா செய்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான கட்டளை மையம் திறந்து வைக்கப்பட்டது.
இதனை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் மருத்துவமனையை மேற்பார்வையிட ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள இயற்கை சிகிச்சை பிரிவு மையத்தில் திடீரென்று யோகா செய்து காட்டினார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுத்தலின்படி அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் "சித்த மருத்துவ வார் ரூம்"என்கிற ஒருங்கிணைந்த கட்டளை மையம் திறப்பு மாறும் துறை ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஆய்வின் ஒரு பகுதியாக யோகா பயிற்சியில் நாமும் கலந்துகொண்டோம்... pic.twitter.com/Ezy7CoQud1
— Subramanian.Ma (@Subramanian_ma) June 11, 2021
யாரும் எதிர்பாராதவண்ணம் இவர் யோகா செய்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அங்குள்ள மருத்துவர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.