முதலமைச்சருக்கும், தனக்கும் சிலை வைத்து வழிபட்ட அமைச்சர்
புதுச்சேரி அருகே உள்ள தென்னம்பாக்கத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று உள்ளது.
இந்த கோவிலில் வேண்டிக்கொள்பவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறினால் சிலை வைத்து நேர்த்தி கடன் செய்வது வழக்கம்.
குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்றவர்கள் அக்குழந்தைகளின் சிலைகளை கோவிலில் வைத்து வழிபடுவார்.
இந்நிலையில், கடலூர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ராஜ்குமார் வீட்டு வசதி, நகர்ப்புற திட்டம், வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

சட்டசபை தேர்தலில் விஜய் வெற்றி பெற்றால் இந்த கோவிலில் சிலை வைப்பதாக வேண்டியுள்ளார்.
அதன்படி, தென்னம்பாக்கத்திற்கு வந்த அமைச்சர் ராஜ்குமார் அழகு சித்தரை வழிபட்டார்.
இதனைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் மற்றும் தன்னுடைய சிலைகளை நேர்த்தி கடனாக கோவிலில் வைத்து வழிபட்டார்.