நயன்தாரா கிடைக்கவில்லை என தற்கொலைக்கு முயன்றவர் அமைச்சரா? : சிவி சண்முகம் கடும் தாக்கு
நயன்தாரா கிடைக்கவில்லை என்றதும் தற்கொலைக்கு முயன்றவர் அமைச்சரா என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார்.இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்
போதை பொருட்கள் அதிகரித்துள்ளது :
அந்த வகையில்அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அடுத்த நாட்டார் மங்கலத்தில் திமுக அரசை கண்டித்தும் மின்சாரக் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வுகளை கண்டித்து அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நேற்று பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் போதைபொருட்கள் விற்பனை அமோகமாக விற்பனையாகி வருவதால் , தமிழக மக்கள் தங்களின் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவேண்டும் என கூறினார்.
நயன்தாரா பின்னாள் சுற்றியவர்
மேலும், திமுக குடும்ப அரசியல் குறித்து பேசிய சண்முகம், உதயநிதி என்ன செய்திருக்கிறார். இந்த நாட்டு மக்களுக்கு அவர் என்ன செய்து செய்து செய்தார் என்பதை விடுங்கள். திமுகவிற்கு அவர் என்ன செய்தார்? சிறைக்கு சென்றிருக்கிறாரா? போராட்டத்தில் கலந்து இருக்கிறாரா? யார் இந்த உதயநிதி.

5 ஆண்டுகளுக்கு முன்னால் நடிகைகளுக்கு பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார் இந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரைக்கும் சென்றவர் இன்றைக்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி என்று சொல்கிறார்கள். வெட்கமாக இருக்கிறது.
இதுதான் சுயமரியாதை இயக்கமா? திமுகவின் சுயமரியாதை இப்போது உதயநிதியின் காலில் போட்டு மிதிக்கப்பட்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஈழப் போரில் புகைப்படங்கள்... பாடங்களை புகட்டும் புலிகளின் புகைப்படங்கள்... உலகப் புகைப்பட நாள்... IBC Tamil