மக்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல் - அமைச்சர் விஜய் பாலாஜி பேச்சு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
இந்நிலையில், 2026 தேர்தலில் மக்கள் ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் விஜய் பாலாஜி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற விஜய் பாலாஜி கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சராக உள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டார்.

இதில் பேசிய அவர், "கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் ஊழல் பண்ணி பார்த்திருப்பீர்கள். ஆனால், 2026 தேர்தலில் மக்கள் நீங்க பண்ணிங்க பாருங்க மிகப்பெரிய ஊழல். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கி, குத்த வேண்டிய இடத்தில் குத்தி நம்மளை ஆட்சிக்கு கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள்” என கூறியுள்ளார்.
பிற கட்சிகளிடம் மக்கள் பணம் வாங்கிவிட்டு தவெகவிற்கு வாக்களித்ததேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக பலரும் விளக்கமளித்து வருகின்றனர்.
சமீபத்தில் அமைச்சர் சரத் குமார் கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.
அது தனது குழந்தைக்கு மாத்திரையை தான் பொடி செய்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், அந்த வீடியோவில் குழந்தை இல்லை, குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது? என சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள், அமைச்சர் சரத் குமார்போதைப்பொருள் பயன்படுத்தினார் எனவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
இந்த விவகாரம் தவெக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் விஜய் பாலாஜியின் பேச்சும் வைரலாகி வருகிறது.