விபத்தில் சிக்கிய அமைச்சர் வேலுமணி, சபாநாயகர் தனபால் வாகனங்கள்
தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி வாகனங்கள் விபத்துக்குள்ளானது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்க பல தேசியக் கட்சி தலைவர்களும் தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். தாராபுரத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி வாகனங்கள் விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 கார்கள் சேதம் அடைந்த நிலையில் 2 ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்பட்டது.
தாராபுரம் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற போது விழுந்து நடந்தது. சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி இருவருமே காரில் இல்லாததால் தப்பினர். முதலமைச்சர் காரில் அமைச்சர் வேலுமணி சென்றதால் இந்த விபத்து இருந்து அமைச்சர் தப்பினார்.