எம்.ஜி.ஆர். வழியில் முதலமைச்சராகிறாரா உதயநிதி - சட்டப்பேரவையில் நடந்த சம்பவம்

dmk mkstalin udhayanidhi stalin minister evvelu
By Petchi Avudaiappan Aug 27, 2021 04:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

எம்.ஜி.ஆர். வழியில் முதலமைச்சராகிறாரா உதயநிதி - சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் திமுக ஆட்சியமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளிக்கும் முன் பேசிய அமைச்சர் எ.வவேலு கே.ஆர்.ராமசாமி, பி.வி.நாராயாணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர், மு.க.ஸ்டாலின் வழியில் திரையுலகத்தில் திராவிட கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் நம்முடைய பிரச்னைகளையும் எடுத்துச் சொல்வதற்கும் நகைச்சுவை தென்றலாக உதயநிதி உலாவிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். வழியில் முதலமைச்சராகிறாரா உதயநிதி - சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் | Minister Velu Praise Udhanidhi Stalin In Assembly

மேலும் உதயநிதி ஸ்டாலின் என சொல்லும் போதெல்லாம் தங்களுக்கு எல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், திமுக திரையுலகில் பட்டுப்போய்விடுமோ என்று அஞ்சிய நிலையில் நமக்கு ஒரு திராவிட நடிகர் கிடைத்திருக்கிறார் என்று எ.வ.வேலு புகழ்ந்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் பிரசாரத்திற்கு செல்ல முடியாத கிராமப்புற தொகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்து இன்று மேஜை தட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்தவர் உதயநிதி தான்.

அவர் ராஜராஜ சோழனுக்கு துணையாக ராஜேந்திர சோழன் இருந்ததுபோல, ராமனுக்கு துணையாக அனுமன் போல திமுக ஆட்சியமைக்க முதலமைச்சருக்கு துணையாக இருந்தவர் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

திரையுலகில் இருந்து புரட்சித்திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானது போல மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி முதலமைச்சர் ஆகியுள்ளதாகவும் அந்த வழியில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிக்கிறார் என்று எவ.வேலு பெருமிதம் தெரிவித்துள்ளார்.