அடுத்த துணை முதலமைச்சராக எப்போது பதவியேற்க போறீங்க - நைசாக நழுவிய அமைச்சர் உதயநிதி
அடுத்த துணை முதலமைச்சராக எப்போது பதவியேற்க போறீங்க என்ற கேள்வி நைசாக நழுவி சென்றார்.
முதலமைச்சரிடம் கோரிக்கை
அரியலூர், பெரம்பலுர், திருச்சி அகிய மாவட்டங்களில்திமுக இளைஞரணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.
அதில் பங்கேற்பதற்காக, தி.மு.க இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, விளையாட்டு துறை சார்பில் தமிழ்நாட்டின் முதலமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
25கோடி ரூபாய் பரிசுகளை வழங்கும் விதத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான 15 விளையாட்டுகளுக்கான போட்டிகள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.
துணை முதலமைச்சர் பதவி பிரமாணம் எப்போது?
இறுதி போட்டி முடிந்த பின்னர் முதலமைச்சர் பரிசுகளை வழங்குவார். ஆஸ்கார் விருதுகள் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் அடுத்த துணை முதலமைச்சராக எப்போது பதவியேற்க போறீங்க என கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து நைசாக நழுவி சென்றார்.