துணை முதலமைச்சர் பதவி வதந்தியா..? செய்தியா..? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்!
Udhayanidhi Stalin
Tamil nadu
DMK
By Jiyath
துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம், "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்பது வதந்தியா? செய்தியா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
வதந்தி தான்
அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் "வதந்தி... வதந்தி தான்... ஆட்சியை குறை சொல்ல எதுவும் இல்லை. பேசும் பொருள் எதுவும் இல்லாத போது ஏதாவது ஒன்றை கிளம்பி விடுறது.
அப்படி ஒரு எண்ணமும் கிடையாது. யோசிக்கிறது கிடையாது. அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக நிற்போம்" என்று பதிலளித்தார்.