மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி...திடீரென பெரியப்பாவை சந்தித்த அமைச்சர் உதயநிதி!!
மதுரை சென்றுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சென்று சந்தித்தார்.
பெரியப்பாவை சந்தித்த அமைச்சர் உதயநிதி
நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அப்போது அவரது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, எனது இல்லத்திற்கு வந்தது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் மீண்டும் திமுகவில் தொடர்ந்து செயல்படுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்.
உதயநிதி அமைச்சரானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil