நடிகர் அஜித்தின் தந்தை மரணம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஜித் தந்தை மரணம்
நடிகர் அஜித்தின் தந்தை உடல் நலக்குறைவினால் காலமானார்.தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார் , இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் (86) உடல்நலக்குறைவினால் சென்னையில் உள்ள வீட்டில் காலமாமானார்.
உதயநிதி அஞ்சலி
அவரது இறுதி சடங்கு பெசன்நகர் மைதானத்தில் 9:30 மணிக்கு பெசண்ட் நகர் மைதானத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகின்றது, கடந்த சில நாட்களாகவே அஜித்குமாரின் தந்தை உடல் நலக்குறைவினால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.