பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி - திருவள்ளூர் சிலையை ஏன் கொடுத்தார்?

Udhayanidhi Stalin Government of Tamil Nadu Narendra Modi Delhi Government Of India
By Thahir Mar 01, 2023 01:53 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பிரதமருடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு 

நேற்று டெல்லியில் பிரதமர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசுகையில்,

பிரதமர் சென்னை வந்த போது, அடுத்த முறை டெல்லி வந்தால் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் படி அவரை சந்தித்தேன். இது அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை என குறிப்பிட்டார்.

Minister Udayanidhi meet PM Modi

மேலும், அவர் முதலமைச்சர் நலன் பற்றி கேட்டறிந்தார். பின்னர், பிரதமரின் தயார் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தேன். என கூறினார்.

அடுத்து, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பற்றி கூறினேன். அது 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுகிறது என கூறினேன். அடுத்ததாக, இந்த அளவில் நடத்தப்படும் ‘கேலோ இந்தியா’ எனும் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை தமிழகத்துக்கு தருமாறு கேட்டுக்கொண்டேன் எனவும் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு 

மேலும், நீட் பற்றியும் தமிழக மக்களின் மனநிலைமை பற்றியும் கூறினேன். அவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தார். இருந்தும் தமிழகம் சார்பில் சட்ட போராட்டம் தொடரும் என கூறினேன். தொகுதிக்கு ஒரு மைதானம் வேண்டும் என கேட்டிருந்தேன். அது பற்றி விசாரித்தோம்.

தான் முதலமைச்சராக இருந்த போது என்னென்ன சவால்களை சந்தித்தேன் என்பதை பிரதமர் மோடி மனம் திறந்து பேசினார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

பிரதமருக்கு திருவள்ளூவர் சிலை கொடுத்த உதயநிதி 

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு திருவள்ளூவர் சிலையை கொடுத்தார். தமிழகம் வரும் போதெல்லாம் பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய வந்த நிலையில் அவருக்கு திருவள்ளூவர் சிலையை கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Minister Udayanidhi meet PM Modi