தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை..!

Tamil nadu Government of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi
By Thahir Jul 17, 2022 06:17 PM GMT
Report

நாளை தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தனியார் பள்ளிகள் மூடல்?

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளதாகவும்,

இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை..! | Minister Tomorrow Meet Private School Committees

அதே சமயம் தனியார் பள்ளிகள் நாளை தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.