என் சகோதரி அப்படிதான் இறந்தார் : சட்டப்பேரவையில் கண்ணீர்விட்ட முன்னாள் அமைச்சர்
சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி கண்கலங்கிய நிகழ்வு தற்போது பேசு பொருளாகியுள்ளது.
சட்டப்பேரவை நிகழ்வு
சட்டப்பேரவையில்ழிற்துறைமானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் சாயப்பட்டறை என்பது தவிர்க்க முடியாத தொழிலாக உள்ளது.

இங்கு சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
புற்று நோய் பாதிப்பு
மேலும் புற்றுநோயால் அதிக இறப்பு ஏற்படுவதாக கூறிய தங்கமணி 15 நாள் முன்பாக எனது சகோதரி இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார் இதை கூறும் போது குரல் தழுதழுத்து கண்ணீர் மல்க பேசினார்.