பாதிக்கப்பட்ட இருவரின் படிப்பும் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
நாங்குநேரியில் நடைபெற்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் பாதிக்கப்ட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
நாங்குநேரி கொடூரம்
திருநெல்வேலி நாங்குநேரி பகுதியில், 12 படிக்கும் மாணவனை சக மாணவர்கள் சாதிய காழ்ப்புணர்ச்சி காரணமாக வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்போது தடுக்க முற்பட்ட மாணவனின் சகோதரியும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படுகாயமடைந்த பள்ளிச் சிறுவனையும் அவரது சகோதரியையும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அரசு துணை நிற்கும்
பாதிக்கப்பட்டவர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியிருக்கிறார். ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று முதல்வர் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் எடுத்துரைக்கும்படி கூறியதாக தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படிப்பு எந்த வகையிலும் தடை படாமல் இருக்க அரசு துணை நிற்கும் என கூறிய தங்கம் தென்னரசு, இந்த வன்முறை சம்பவத்தில்ஈடுபட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.