அதிமுக ஆட்சியில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கபட்டது : தங்கம் தென்னரசு
திமுக ஆட்சியில் மீத்தேன் கொண்டுவரப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு வைத்ததற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறியுள்ளார்.
மீத்தேன்
நேற்று சட்டப்பேரவை முடிந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக ஆட்சியில் தா மீத்தேன் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை அதிமுக ஆட்சியில் ரத்து செய்தோம் என்று பேசியிருந்தர்.

இபிஎஸ்-ன் இந்த குற்றச்சாட்டுக்கு திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் இந்த டெல்டாகாரர் (மு.க.ஸ்டாலின்) தான் மீத்தேன் திட்டத்திற்கு ஆதரவு அளித்தார்கள் என பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டினார்.
ஆனால், உண்மை அதுவல்ல. 3500 கோடி மதிப்பீட்டில் 1,500 வேலைவாய்ப்ப்பை உருவாக்கும் மீத்தேன் திட்டம் என்று திமுக ஆட்சியில் இருந்த போது 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. வேலைவாய்ப்பு மாநில வருவாய் உயரும் என நம்பிக்கை இந்த ஒப்பந்தம் போடப்பட்டது
மீத்தேன் திட்டம்
அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே, மீத்தேன் திட்டம் குறித்து சுற்றுசூழல் அமைப்பு மூலம் முறையான ஆய்வு நடத்தி எந்தவித பாதிப்பும் இல்லை என்றால் மாட்டுமே அனுமதி என்று முக்கிய அம்சம் இடம் பெற்று இருந்தது. அந்த விதியினை கொண்டு தான் அதிமுக அரசு 2017ஆம் ஆண்டு மீத்தேன் திட்டத்தை ரத்து செய்தது. ஆனால் அதற்கு முன்னரே அந்த திட்டத்திற்கான லைசன்ஸ் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை விவசாயி என காட்டிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி இருக்கும் அதிமுக ஆட்சியில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கபட்டது. அதனை எதிர்த்து நெடுவாசலில் விவசாயிகள் போராடினர் என குற்றம் சாட்டினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறுகையில், முதல்வர் திட்டவட்டமாக சட்டப்பேரவையில் கூறிவிட்டார். நிலக்கரி சுரங்கத்திற்கு திமுக அரசு அனுமதி அளிக்காது என கூறினார்.