சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு விடுவிப்பு

DMK Thangam Thennarasu
By Irumporai Dec 13, 2022 10:57 AM GMT
Report

கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தங்கம் தென்னரசு வழக்கு

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது.

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு விடுவிப்பு | Minister Thangam Thanarasu Acquitted

வழக்கு விடுவிப்பு

அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லை என அறிவித்து இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.