தமிழகத்தில் இனி மாதந்தோறும் மின் கட்டணம் : அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

DMK Thangam Thennarasu
By Irumporai Jun 20, 2023 09:10 AM GMT
Report

தமிழகத்தில் மின் கட்டணம் இனி வரும் காலங்களில் ஸ்மார்ட் மீட்டர் மூலமாக வசூல் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம்

தமிழகத்தில் தற்போது அனைவரது வீடுகளிலும் டிஜிட்டல் மீட்டர் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் மின் உபயோகம் கணக்கிடப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருக்கிறது. 

தமிழகத்தில் இனி மாதந்தோறும் மின் கட்டணம் : அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் | Minister Thangam Tennarasu Monthly Electricity

ஸ்மார்ட் மீட்டர்

இதனை மேம்படுத்தும் நோக்கில், அடுத்ததாக தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதனை புதிய மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஸ்மார்ட் மீட்டர் பயன்பாட்டுக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தப்படும் நடைமுறை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.