கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சுவாமிநாதன்
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரக் கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தடுப்பு பணிகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மருத்துவமனை டீன் வள்ளி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஆய்வின் போது அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் இருப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்த அமைச்சர் என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அவிநாசி, காங்கேயம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.